Monday, 11 May 2015

Www.கிட்னாப்சிங்.com

 ஒப்பன் பன்னுனா ஒரு ஹீரோ MBBS படிச்சிட்டு வேலை இல்லாம சுத்திக்கினு இருக்காரு ( எவ்ளோ நாள் தாங்க engg படிச்சவனே வேலை இல்லாம இருக்குரது )
திடிர்னு அவர் போனுக்கு ஒரு மெசெஜ் வருது என்னானு பார்த்தா கடத்தல் தொழில் செய்து சம்பாதிக்க ஆசையா தொடர்புக்கு :- 9876543210 நு இருக்கு ஹீரோவும் ஐ ஜாலி நமக்கு ஒரு வேலை கிடைச்சிட்டுனு அந்த நம்பருக்கு போன் போடுராரு ( கட் பன்னா ஆள் கடத்தல் துறை அலுவலகத்துல ஒப்பன் பன்ரோம் ) அங்க ரெண்டு பேரு போன் எடுத்து வாங்க வந்து அப்ளிக்கேஷன பில் பன்னுங்க நு கூப்டுராங்க.. ஹீரோவும் ஒக்கே நு வைக்கிராரு ஹீரோவும் இவன சூது கவ்வும் விஜய் சேதுபதினு நினைச்சிடுராரு ஆனா இவரு வியாபாரி பட வடிவேலு மாதிரி ஒரு குழந்தைய கூட ஒழுங்கா கடத்த தெரியாத கேரக்டரு அங்க தான் ஒரு flashbacka போடுரோம்

ஒரு மாலை நேரம் இஸ்கூல் விடுது கடத்தல் துறை தலைவரும் செயலாலரும் ஒரு பையன அப்பா கூப்டார்ங்க நு கடத்துராங்க முதேவிங்க காசு கேக்குரதுல கூட நல்ல நேரம் பார்த்து காசு கேக்கலாம்னு அரை மணி நேரம் சும்மா ரவுண்ட் அடிக்கிரானுங்க அந்த பையனும் அமைதியா வந்துட்டு இருந்தான் திடிர்னு பாத்றும் வருதுனு நிப்பாட்ட சொன்னான் இவனுங்களும் இங்க கூட்டமா இருக்குனு கொஞ்சம் தூரம் போயி நிப்பாட்டுனானுங்க அங்க ஒரே ஒரு வீடு தான் இருந்துச்சுனு நிப்பாட்டுனானுங்க கூறுகேட்ட குக்கர்ஸ்கு அது அவன் வீடுனே தெர்ல அவன் இவங்களுக்கு ட்ரைவர் பேட்டாவ கொடுத்துட்டு போய்ட்டான் இப்பேர்பட்டவன் கிட்ட போய் ஹீரோ வேலை கேக்ராரு அவனுங்களும் இவன யுஸ் பன்னிக்கலாம்னு entrance feesaa ஒருத்தவன கடத்தி 2 lakhs வாங்கினு வா நு டெல்லுரானோ ஹீரோவும் ஒரு குட்டி பையன கடத்தி உங்க அப்பாக்கு போன போடுரானு சொல்ராரு அவன் அதுக்கு என்ன கடத்துனா no use என் தம்பி தான் செல்லம் அவன கடத்துங்க நு சொல்ரான். ஹீரோவும் கடத்துராரு அவண்ட கேட்டா அவன் எங்க அப்பா மூனாவது பையனுக்கு ஏர்பாடு பன்ராரு அவன கடத்துங்க நு சொல்ரான் உடனே அவங்க அப்பாவையும் கடத்தி உன் வைப் கிட்ட 2lakhs கேலுனு சொல்ராரு அவரு wifeக்கு போன் அடிச்சி ஹீரோ நடந்தத சொல்ராரு உடனெ அவரு wife நன்றிங்க நானே எப்புடி அவர கயட்டி வுட்டுட்டு என் லவ்வரு கூட ஒடலாம்னு இருந்தேனு சொல்லிட்டு ஒடிட்டு ஹீரோ வெருத்து போய் தன்ன கடத்திட்டதா ஹிரோ வீட்டுக்கே போன் அடிக்கிராரு ஹிரோ :- அம்மா அம்மா அம்மா :- தம்பி தம்பி அங்க ஒரு unknown person போன புடுங்கி உன் அம்மா அப்பாவ கடத்திட்டோம் ஒலுங்கா 2 lakhs கொடு நு சொல்ரான்

Tuesday, 14 April 2015

கவிதை தொட்டி

 

  1) உன்ன விட அழகாகனுங்குர காரணத்துனால தானோ என்னமோ அந்த
நிலா வெயில்லயே வரது இல்ல 


  2) எதுகை மோனைக்கு கூட இடம் தராமல் நிரம்பி வழியுது என் காதல் என் கவிதைகளில்


  3) உன் இதயத்துக்குள் நுழையாத போது தெரிகிறது என் காதல் எவ்வளவு பெருசுனு


    4) உன்  பிறந்த நாள் போராட ஆரமித்து விட்டது தங்களுக்கு காதல் ஜெயந்தி  அங்கிகாரம் கேட்டு


   5) உன் பெயரில் உள்ள எழுத்துக்கள்   போராட ஆரமித்துவிட்டது தங்களுக்கு காதல் எழுத்துக்கள் அங்கிகாரம் கேட்டு

  6) சீக்கிரம் ஒடி ஒளிஞ்சிக்கொ உன்னை உடல் உறுப்பு திருட்டு வழக்கில் தேடுகிறார்கள் இதயத்தை    திருடியதர்காக



  7) என் காதல் வளர நான் விதைத்த விதை என் கவிதை அதற்கு நான் ஊற்றிய தண்ணீர் என் கண்ணீர்

 8)  உன் பார்வை எனக்கு போதை ஏத்தும் குவாட்டர்னா
உன் பேச்சு எனக்கு ஊறுகாய்
      
                                                                                                                                      - நந்து





  

Monday, 13 April 2015

INTRO

இப்ப பார்த்திங்கனா எல்லாத்துக்குமே ஒரு இண்ட்ரோ கண்டிப்பா வேனும் அதுனால என் ப்ளாக்குக்கும் ஒரு முன்னுரை கொடுக்கலாம்னு இருக்கேன்
  சோ முதல்ல ஒனரான என்ன பத்தி சொல்ரன்

    என்னை எல்லாரும் நந்து நு கூப்டுவாங்க  இந்த முஞ்சுபுக்ல கொஞ்சம் பிரபலம் Idiot nandhu


           Imaginary Idiot | Editor | ஊரு உலகம் தெர்யாத பையன்


 சரி அப்புடி இவன் கிட்ட இன்னா தான் டெலண்ட்டு இருக்குனு நீங்க கேட்டிங்கன்னா இவனுக்கு யோசிக்கிரத தவிற ஒன்னும் தெர்யாதுங்க

  ஒ அப்ப இவன் மத்தவங்க மாதிரி டெக் ரிலேடட் போஸ்ட் போடமாட்டான்னா கண்டிப்பா போடமாட்டான் உடனே என்ன போஸ்ட் போடுவான்னு கேக்காதிங்க யெதாவது ஒரு போஸ்ட் கண்டிப்பா போடுவான்